எம்மைப் பற்றி

சரித்திரப் பின்னணி

முடியாட்சிக் காலத்தில் (கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இருந்து 1815 வரை) அரச சுவடிகள் கூடங்களுக்குப் பொறுப்பாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்ததுடன் ஹே மக்டோவாலின் 19 ஆம் நூற்றாண்டின் விபரங்கள் (19 century account), 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் கண்டிய இராச தானியில் இருந்த சுவடிகள் கூடத்தைப் பராமரிப்பதற்காக மஹாமொகொட்டி (Chief secretary) என அழைக்கப்படும் அலுவலர் இருந்தார் என்பது தெளிவாகின்றது.

1640 ஆம் ஆண்டில் சுவடிகள் கூடம் காலியில் இருந்ததுடன் 1656 தொடக்கம் 1796 வரை அது கொழும்பில் வைக்கப்பட்டிருந்தது. ஒழுங்கு முறையில் சுவடிகள் கூட்டத்தைப் பராமரிப்பது கி.பி.1640 தொடக்கம் 1796 வரை இலங்கையின் கடலோர மாவட்டங்களில் இருந்த ஒல்லாந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டது. சுவடிகள் காப்பாளர் (Archivist) பதவி 1901 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பிரித்தானியரின் காலத்தில் காலனித்துவ / பிரதான செயலாளரின் அலுவலகத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்த சுவடிகள் கூடமானது 1947 ஆம் ஆண்டு அரச சுவடிகள் கூடத் திணைக்களமாக உருவாக்கப்பட்டது. சுதந்திர கால கட்டத்தில் 1973 ஆம் ஆண்டுச் சுவடிகள் கூடச் சட்டம் இல. 48 சட்டமாக்கப்பட்டதுடன் திணைக்களம் தேசிய சுவடிகள்கூடத் திணைக்களமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நோக்கமும் செயற்பாடுகளும்s

1973 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க தேசிய சுவடிகள் கூடச் சட்டம் மற்றும் 1981 ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தச் சட்டம் இல.30 மூலமும் தேசிய சுவடிகள் கூடத்தின் நோக்கமும் செயற்பாடுகளும் பின்வருமாறாகும்.

  1. அரச சுவடிகளுக்கு அலுவலக ரீதியான காகவலனாகவும் (custody) பௌதீக ரீதியிலான பாதுகாப்பையும் வழங்குவதுடன் அவற்றை உசாவுவதற்கும், கற்றலுக்கும் உபயோகப் படுத்தவும் வசதிகளைச் செய்து கொடுத்தல்

  2. அரச நிறுவனங்களில் ஆவண மதிப்பாய்வுகளை நடத்துதல்

  3. சனாதிபதி சுவடிகள் கூடத்தையும் அதன் உசாத்துணைச் சேவைகளையும் நிருவகித்தல்

  4. நாட்டினுள் அச்சிடப்படும் புதினத்தாள்கள் மற்றும் வெளியீடுகளின் சட்டவைப்பு நிலையமாகச் செயற்படல்

  5. அச்சகங்கள், அச்சீட்டாளர் வெளியீட்டாளர் மற்றும் புதினத்தாள் கட்டளைச் சட்டத்தை நிருவகித்தல்

  6. ஆவண முகாமைத்துவம் மற்றும் பராமரித்தற் செயற்பாடுகள் தொடர்பான பயிற்சி நெறிகளையும் பயிற்சிப் பட்டறைகளையும் நடத்துதல்.

  7. சமய தாபனங்களில் உள்ள ஆவணங்களைப் பராமரித்தல்

  8. ஆவணப் பராமரிப்பில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் உதவுதல்
சட்ட நியதிகளும், பிரமாணங்களும்

சட்டங்கள்

  • 1973 ஆம் ஆண்டின் 48 அம் இலக்க தேசிய சுவடிகள் கூடச் சட்டம்.
  • 1981 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க தேசிய சுவடிகள் கூடத் (திருத்தச்) சட்டம்

பிரமாணங்கள்

  • பொது ஆவணங்களுக்கு பொது மக்களின் பிரவேசம். 1978.12.15 ஆம் திகதிய 15 ஆம் இலக்க அரசாங்க வர்;த்தமானி.
  • ஆணைக்குழுக்க்ளின் ஆவணங்களுக்கு பொது மக்களின் பிரவேசம். 1980.01.02 ஆம் திகதிய 74 ஆம் இலக்க அரசாங்க வர்;த்தமானி.
  • சட்ட ஆவணங்களை (நீதி மன்றம்) அகற்றும் செயற்பாடு - 1979.01.26 ஆம் திகதிய 29 ஆம் இலக்க அரசாங்க வர்;த்தமானி.
  • கச்சேரி (மாகாண மட்ட நிருவாகம்) ஆவணங்களை அகற்றும் செயற்பாடு - 1980.07.25 ஆம் திகதிய 99 ஆம் இலக்க அரசாங்க வர்;த்தமானி.
  • அரச அலுவலக நடத்துதற் செயற்பாடுகள் பற்றிய மற்றும் சிறு பிரசுரங்களை அகற்றும் செயற்பாடு 1984.09.31 ஆம் திகதிய 313 ஆம் இலக்க அரசாங்க வர்;த்தமானி.
  • அரச ஆவணங்களை அகற்றுதல் தொடர்பான நிருவாக நியதிகள் (நுளவயடிடiளாஅநவெ ஊழனந), பந்தி 28 பிரிவு 9:1-9:8
  • தேசிய சுவடிகள் கூடத்தின் தேடுதல் அறைச் சட்டதிட்டங்கள்

 

Back to top