பொது சனத் தொடர்பு அலவலகம்

பொதுசனத் தொடர்பு அலுவலகம் - மு.ப. 8.30 – பி.ப. 4.15
மதிய பொசன இடைவேளை – பி.ப. 12.30 – பி.ப. 1.00
நிதிப் பரிமாற்றம் (கொடுக்கல் வாங்கல்) - மு.ப. 8.30 – பி.ப. 3.00

பொது விடுமுறைத் தினங்களில் மூடப்பட்டிருக்கும். எனினும் மின்னஞ்சல் (e-mail) மற்றும் பக்ஸ் (Fax) என்பன ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும் செயற்படும்

பொது மக்களுக்கான சேவைகள்

  1. அ) ஆவணங்களையும் வெளியீடுகளையும் உபயோகப் படுத்துவதற்குப் பொது மக்களுக்கு வசதிகளை வழங்குதல்

  2. ஆ) கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைத் தேடி, உறுதிப் படுத்தப்பட்ட பிரதிகளை பொது மக்களுக்கு வழங்குவதுடன் அப்படி வழங்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக நீதி மன்றத்தில் சாட்சியளித்தல்

  3. இ) கீழே குறிப்பிடப் பட்டுள்ள ஆவணங்களைத் தேடி, உறுதிப் படுத்தப்பட்ட பிரதிகளை பொது மக்களுக்கு வழங்குதல். சட்ட சம்பந்தமான தேவைகளின் போது நீதி மன்றத்தில் குறித்த ஆவணம் தொடர்பாக சாட்சியமளித்தல்.

    - ஓல்லாந்தர் தோம்புகள் - (18ஆம் நூற்றாண்டு)
    - அரச கொடைகள் ( 1802 – 1931)
    - வர்த்தமானிகள் (1802 தொடக்கம் இன்றுவரை)
    - பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புப் பற்றிய தகவல்கள் (ஓலைச் சுவடிகள்) (1806 –1812)
    - காணி இணக்க ஆவணங்கள் (1867 - 1900)
    - தானிய வரிப் பதிவேடு (1880 – 1892)
    - கோவில் காணிப் பதிவேடு (1856 – 1870)
    - சேவை உரிமைநிலைப் பதிவேடு (1870 – 1872)
    - குடிவழிப் பட்டியல் பதிவேடு (18 ஆம் நூற்றாண்டு)
    - வாக்காளர் பதிவேடு (1968 – 1992)
    - சட்டங்கள் (1802 தொடக்கம் இன்றுவரை)
தரைஇறக்கம்


மேல்