தேடுதல் அறை
போது மக்கள் ஆய்வு செய்வதற்காக இப்பிரிவில் வசதிகள் வழங்கப்படுகின்றன.
ஆவணங்களில் இருந்து தகவல்களைப் பெறுதல்
தேசிய சுவடிகள் கூடத் திணைக்களத்தில் வைப்பிலிடப்பட்டுள்ள பொது ஆவணங்கள் பொது மக்களின் பார்வைக்கு வழங்கப்படும் சில ஆவணங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்கு வழங்கப்படுவதில்லை. அப்படிப்பட்ட ஆவணங்களைத் தேடுவதற்கு ஆய்வாளர்கள் அவ் ஆவணங்களுக்குரிய நிறுவனங்கள் / நபர்களிடம் இருந்து எழுத்து மூலமான அனுமதியைப் பெற வேண்டும்.
ஆவணங்களைத் தேடுவதற்கான வசதிகள்
- ஆய்வு / தேடுதல் அறையானது ஆவணங்களுக்கேற்ப சுருக்கப் பட்டியல்கள், சுட்டி அட்டைகள் மற்றும் ஏனைய வழிகாட்டிகள் போன்றவற்றை தேடுதலுக் உதவுவதற்காக் கொண்டுள்ளது.
- சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கிலப் புதினத் தாள்களுக்கான கால ஒழுங்கிலான வழிகாட்டிகள்
- ஆவணங்களைத் தேட விரும்பும் பொது மக்கள் தமது தேடுதல்களைத் தாமாகவே செய்ய வேண்டும். சுவடிகள் கூட அலுவலர்களினால் தேடும் முறை, கிடைக்கக் கூடிய ஆவணங்கள், மற்றும் தேடுவதற்கு உதவக் கூடிய சாதனங்களை உபயோகப் படுத்தும் முறை பற்றி பொது மக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படும்.
Back to top |