தொழில் நுட்பப் பிரிவு
இலங்கைச் சுவடிகள் கூடமானது சகல உபகரணங்களினுடனும் கூடிய தொழில் நுட்பப் பிரிவொன்றைக் கொண்டுள்ளது.
இப்பிரிவு சுவடிகள் கூட ஆவணங்களின் பேணல் பாதுகாத்தல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றது. இப்பிரிவு உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் பயிற்சி பெற்ற உத்தியோகத்தர்களைக் கொண்டிருப்பதுடன் அவர்கள் சமய தாபன ஆவணங்களைப் பேணிப் பாதுகாப்பதுடன், அரசாங்கத்திற்கும் அரச சார்பான மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொது மக்களுக்கும் ஆவணங்களைப் பேணுதல் பாதுகாத்தல் தொடர்பாகத் தேவைப்படும் தொழில் நுட்ப உதவிகளை வழங்குகின்றன.
Back to top |