Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு

பொதுமக்கள் தொடர்பு பிரிவு

தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் களஞ்சியங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள், சுவடிகள், வெளியீடுகள் என்பவற்றைப் பயன்படுத்துவதன்மூலம் பல்வேறு சமூக பொருளாதார அரசியல்; வரலாறுகள் மற்றும் இலக்கிய பெறுமதியுடைய தகவல்களை ஆய்வுசெய்யும் நோக்கில் வருகைதருகின்ற உள்நாட்டு வெளிநாட்டு பொதுமக்களுக்குத் தேவையான நேரத்தில் அவற்றை வழங்கி திணைக்களத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்படுகின்ற இணைப்பாக்க நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடர்பு பிரிவு மேற்கொள்கிறது. பொதுமக்கள் தொடர்பு அதிகாரி இவ்விணைப்பாக்க நடவடிக்கையை நெறிப்படுத்துவார்.

  • திறக்கப்படும் நேரம் - மு.ப.8.30 முதல் பி.ப.4.15 வரை
  • பணக் கொடுக்கல் வாங்கல் - மு.ப.8.30 முதல் பி.ப.3.00 வரை
  • அரசாங்க விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் மின்னஞ்சல் மற்றும் தொலைநகல் தொடர்புகள்

பொதுமக்கள் தொடர்பு பிரிவின் மூலம் நிறைவேற்றப்படுகின்ற சேவைகள்

  • ஆய்வு மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக வருகின்ற ஆய்வாளர்களுக்கு/ பொதுமக்களுக்கு சுவடிகளைப் பரிசீலிப்பதற்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்
  • பொதுமக்களின் தேவைகளுக்காக குறித்த விண்ணப்ப படிவங்களையும் அறிவுறுத்தல் பிரசுரங்களையும் விநியோகித்தல் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக உரிய அதிகாரியிடம் அனுப்புதல்
  • சுவடிகளிலிருந்து பிரித்தெடுப்பதற்கு வசதிகள் செய்துகொடுத்தல்
  • சுவடிகளிலிருந்து தகவல்களைத் தேடுதல் மற்றும் அவற்றிலிருந்து சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல்
    • ஒல்லாந்தர் விபரத் திரட்டு (18ஆம் நூற்றாண்டு)
    • அரசாங்க முத்திரையிடப்பட்ட பத்திரங்கள் (1802 - 1931)
    • அரசாங்க வர்த்தமானி (1802 முதல் இற்றைவரை)
    • பிறப்பு, இறப்பு, விவாகம் தொடர்பான தகவல்கள் (ஏடுகள்) (1806 -1 862)
    • காணி மீட்டல் பதிவேடுகள் (1867 – 1900)
    • தானிய குத்தகை ஒப்பந்த பதிவேடு (1880 - 1892)
    • விஹாரை, தேவாலகம் பதிவேடு (1856 - 1870)
    • சேவை அனுபவ பதிவேடு (1870 – 1872)
    • வாக்காளர் இடாப்பு (1965 – 1992, கொழும்பு மாவட்டத்திற்கு), (1954 – 1991,ஏனைய மாவட்டங்களுக்காக
    • சட்டங்கள் (1949 முதல் இற்றைவரை)
    • கட்டளைச் சட்டங்கள் (1870 -1956)
    • செய்தித்தாள்கள் (1832 முதல் இற்றைவரை)
  • சட்ட நடவடிக்கைகளுக்காக அவ்வாறு வழங்கப்படுகின்ற ஆவணங்களுக்கு நீதிமன்றத்தில் சாட்சியமளித்தல்
  • 1976ஆம் ஆண்டுமுதல் இற்றைவரை உள்ள செய்தித் தாள்களிலும் அரசாங்க வர்த்தமானியிலும் பிரித்தெடுத்த பகுதிகளை (தேசிய நூலகங்கள், ஆவணங்கள் சேவை சபையிலிருந்து எடுத்துவரும் பிரதி) சான்றுப்படுத்துதல்
  • வருகைதருகின்ற பொதுமக்களின் தேவைகளை திணைக்களத்திலேயே நிறைவேற்ற முடியமானால் அதற்குத் தேவையான வழிகாட்டல், அவ்வாறின்றேல் சம்பந்தப்பட்ட ஏனை நிறுவனங்களுக்கு அனுப்புதல்
Last Updated on Tuesday, 09 December 2014 10:06  
காப்புரிமை © 2024 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது: 16-04-2024.