Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு

வரலாற்று பின்னணி

கடந்த காலங்களிலிருந்தே அரச சுவடிகள் காப்பக பொறுப்பதிகாரியொருவர் இருந்ததாக வரலாற்று அறிக்கைகள் சான்று பகர்கின்றன. ஹே மெக்டோவல் அவர்களின் 19ஆம் நூற்றாண்டுக்குரிய அறிக்கையின் பிரகாரம், 18ஆம் நூற்றாண்டின் மற்றும் 19ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில், கண்டி அரச மாளிகையில் சுவடிகள் கூடத்திற்குப் பொறுப்பாக "மகா மொஹொட்டி" (தலைமை செயலாளர்) என்ற அதிகாரி சேவையாற்றியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம்செய்த முதல் ஐரோப்பிய நாட்டவர்களான போர்த்துக்கீசர் இலங்கையின் கரையோர பிரதேசத்தை கி.பி.1505 முதல் 1630வரை ஆட்சிசெய்தனர். அவர்கள் தமது ஆட்சிக்குட்பட்ட கரையோர பிரதேசங்களைச் சார்ந்த உள்நாட்டு அறிக்கைகளை வைத்துக்கொண்டனர். ஒல்லாந்தர் 1640ல் போர்த்துக்கீசர் வசமிருந்த கரையோர பிரதேசங்களைக் கைப்பற்றியபோது போர்த்துக்கீசரின் பல சுவடிகளை போர்த்துக்கீசரே அழித்துவிட்டனர்.

எவ்வாறாயினும், கி.பி.1640 முதல் 1796வரை இலங்கையின் கரையோர பிரதேசங்களை ஆட்சிசெய்த ஒல்லாந்தர் படிப்படியாக சுவடிகள் கூடமொன்றைப் பேணுவது தொடர்பாக இலங்கைக்கு அறிமுகப்படுத்தினர். கி.பி.1640ல் காலியில் அமைக்கப்பட்ட சுவடிகள் கூடம் கி.பி.1665ல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு கி.பி.1796 அங்கு அமைக்கப்பட்டிருந்தது.
கி.பி.1796ல் ஒல்லாந்தர்களிடமிருந்து கரையோர பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொண்டதன் பின்னர் ஆங்கிலேயர்கள் சுவடிகள் முகாமைத்துவ முறைமை மேம்படுத்தப்பட்டது. பிரித்தானிய யுகத்தின் ஆரம்பகாலப்பகுதியில், அரச சுவடிகளின் நம்பிக்கை பொறுப்பு பிரித்தானிய நிர்வாகத்துக்குரிய காலனித்துவ செயலாளரின் கீழ் இருந்தது. 1803ஆம் ஆண்டில் அப்பதவிக்கு "ஒல்லாந்தர் சுவடிகள் நம்பிக்கை பொறுப்பாளர்" பதவி எனப் பெயரிடப்பட்டது.

1901ஆம் ஆண்டில் "சுவடிகள் காப்பாளர்" பதவி ஏற்படுத்தப்பட்டதன் பின்னர், சுவடிகள் கூட நடவடிக்கைகள் கொழும்பில் அமைந்துள்ள தலைமை செயலகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. 1947ஆம் ஆண்டில் 'அரச சுவடிகள் காப்பக திணைக்களம் அமைக்கப்பட்டது.

1966 ஒக்ரோபர் 01ஆம் திகதி "அரச தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம்" என்றபெயரில் இத்திணைக்களத்தின் பெயர் மாற்றப்பட்டது. அத்துடன் "அரச சுவடிகள் காப்பாளர் பதவியும் பெயரும் தேசிய சுவடிகள்கூட பணிப்பாளர்" என மாற்றப்பட்டது.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது, அதாவது 1942ல் பாதுகாப்பு காரணங்களுக்காக தேசிய சுவடிகள்கூடம் கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அதன் பின்னர் 1962ல் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ சுமங்கல கட்டிடத்துக்கு இச்சுவடிகள் கூடம் கொண்டு செல்லப்பட்டது. 1986ல் கொழும்பு குதிரைப் பந்தய திடலில் தற்பொழுது தேசிய சுவடிகள் காப்பகம் இருக்கும் கட்டிடத்தில் "தேசிய சுவடிகள்கூட திணைக்களம்" அமைக்கப்பட்டது.

தற்பொழுது தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம் தேசிய மரபுரிமைகள் தொடர்பான அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றது. நாட்டின் நினைவுக் குறிப்புகளை பாதுகாத்துக்கொள்கிற அறிவுக் களஞ்சியமாக இத்திணைக்களம் தேசத்தின் மரபுரிமையாளர்களான பிள்ளைகளுக்காக அறிவை வழங்கி பொதுமக்களுக்காக தகவல் மையமாகவும் கல்வி நிலையமாகவும் ஆகக்கூடிய சேவையை வழங்குகிறது.

Last Updated on Friday, 07 October 2016 06:19  
காப்புரிமை © 2024 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது: 16-04-2024.