Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு

களஞ்சியம்

திணைக்களத்தின் 6 களஞ்சியங்களில் வரிசையில் வைக்கப்பட்டால் சுமார் 22 கி.மீ நீளத்திற்குச் செல்லக்கூடிய மிகப் பெறுமதியானதும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததுமான பதிவேடுகள் வைப்பிலிடப்பட்டுள்ளன. அவற்றிடையே போர்த்துக்கீசர் காலத்தின் சில பதிவேடுகளின் நிழல்பட பிரதிகள், ஒல்லாந்தர் காலத்தின் (1640-1796) காணிகள் தோம்பு (விபரத் திரட்டு), குடும்பங்கள் தோம்பு, அரசியல் சபையின் குறிப்புகள் மற்றும் நாட்டில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் புழக்கத்திலிருந்த அனைத்து பதிவேடுகள், பிரித்தானியர் யுகத்தில் அரச முத்திரையிடப்பட்ட அந்தரங்கக் கடிதங்கள், தானிய வரி பதிவேடுகள், நில பங்குகள் மற்றும் நிலவுடைமைப்பங்கு பதிவேடுகள், சுதந்திரத்தின் பின்னர் 1948 முதல் அரச, அரச சார்புடைய மற்றும் ஏனை நிறுனங்களின் பதிவேடுகள் என்பன உள்ளன.

  • 1640 – 1796வரை  ஒல்லாந்தர் பதிவேடுகள்
  • 1796 – 1947வரை பிரித்தானிய பதிவேடுகள்
  • 1948 இன் பின்னர் அனைத்து அரச நிறுவனங்களின் முக்கியமான பதிவேடுகள்
  • 1830 இன் பின்னர் இலங்கையில் வெளியிடப்பட்ட பத்திரிகைகள்
  • அச்சிடப்பட்ட வெளியீடுகளும் நூல்களும்
  • வரலாற்றுரீதியான கையேடுகள் தொகுப்பு
  • அந்தரங்க பதிவேடுகள் தொகுப்பு
  • தனிப்பட்ட பதிவேடுகள் தொகுப்பு
  • வரைபடங்கள் தொகுப்பு
    • போர்த்துக்கீசர் ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானிய யுகத்தின் வரைபடங்கள் (1505 - 1947)
    • சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் வரைபடம் (நில அளவை நாயகத்தின் வரைபடங்கள்.
  • நன்கொடையாக அளிக்கப்பட்ட அல்லது கொள்வனவு செய்யப்பட்ட பதிவேடுகள்.
  • நிறுவனங்கள் மற்றும் ஆட்களின் தனிப்பட்ட கையேடுகள் மற்றும் தனிப்பட்ட பதிவேடுகள்
  • என்பவற்றின் தொகுப்பு
  • பண்டாரநாயக்க குடும்ப பதிவேடுகள் உள்ளடங்கிய ஹொரகொல்ல நூலகம்
  • டைம்ஸ் தொகுப்பு
  • தேர்தல் பிரசுரங்கள் தொகுப்பு

இவற்றைவிட திணைக்களத்தின் சட்டரீதியான வைப்புகள் இரண்டு களஞ்சியங்களில் வைக்கப்பட்டுள்ளன.

Last Updated on Thursday, 21 August 2014 10:00  
காப்புரிமை © 2024 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது: 16-04-2024.