Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு

டைம்ஸ் சேகரிப்பை எண்வரிசைப்படுத்தல்

1846ஆம் ஆண்டில் த டைம்ஸ் ஒப் லிமிடெட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் 1985ஆம் ஆண்டில் இந்நிறுவனம் மூடப்பட்டது. இந்நிறுவனத்தை மூடுகின்றபோது தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்களம் இந்த அபூர்வமான தகவல் அடங்கிய டைம்ஸ் சேகரிப்பை கொள்வனவு செய்தது. அதன்பின்னர் இந்த ஆவணச் சேர்க்கை "டைம்ஸ் சேகரிப்பு" என பெயரிடப்பட்டு அது ஆவண தொகுப்பு இலக்கம் 326இன் கீழ் வைப்பில் இடப்பட்டது. 1846 முதல் 1985 வரையிலான காலப் பகுதியில் டைம்ஸ் பத்திரிகை நிறுவனத்தின் வசம் இருந்த பத்திரிகை கட்டுரைகள் மற்றும் புகைப்படங்கள் டைம்ஸ் சேகரிப்பில் உள்ளடங்குகின்றன. அந்த நிறுவனத்தின் மூலம் பத்திரிகைகளை அச்சிடுவதற்கு மேலதிகமாக அத் தினசரி செய்தித்தாள்களில் வெளியான பல்வேறு தகவல்கள் தொடர்பான கட்டுரைகள் மற்றும் அக்கட்டுரைகளுக்காக பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் என்பவற்றை சேகரித்து தனியான ஒரு சேகரிப்பாக பேணப்பட்டுள்ளது. சுமார் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட பத்திரிகைள் கட்டுரைகளும் புகைப்படங்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

அக்கட்டுரைகள் மற்றும் புகைப்படங்களுக்காக டைம்ஸ் பத்திரிகை நிறுவனம் முறையாக தயாரிக்கப்பட்ட சூசிகை சேகரிப்பு ஒன்றும் இப் பிரிவின் வசம் உள்ளது.

டைம்ஸ் பிரிவில் வைப்பில் இடப்பட்டுள்ள ஆவணங்கள்

  • பத்திரிகைகளில் வெட்டப்பட்ட துண்டுகள் (Paper cutting) – உள்ளுர் மற்றும் வெளிநாடு
  • வாழ்க்கைச் சரிதம் (Biographies) – உள்ளுர் மற்றும் வெளிநாடு
  • புகைப்படங்கள் (Photos)
  • கட்டளைச்சட்டங்கள் (Ordinance)
  • சட்டவாக்க சட்டங்கள் (Legislative Enactments)
Last Updated on Monday, 25 August 2014 08:12  
காப்புரிமை © 2024 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது: 16-04-2024.