Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு

தற்பொழுது நிறைவேற்றப்படுகின்ற கருத்திட்டங்கள்

டைம்ஸ் தொகுப்பை எண்வரிசைப்படுத்தல்

டைம்ஸ் தொகுப்பு, திரைப்படம், விளையாட்டு, கலை, அரசியல், பொருளாதார நடவடிக்கைகள், கலாசார அலுவல்கள், மத அலுவல்கள், மற்றும் ஏனைய பல துறைகள் தொடர்பாக மிக முக்கியமான தகவல்கள் உள்ளடங்கிய புகைப்படங்கள் தொகுப்பும் செய்திப் பத்திரிகைகள் தொகுப்பும் 'டைம்ஸ் தொகுப்பு' எனக் குறிப்பிடப்படுகிறது. டைம்ஸ் ஒப் சிலோன் லிமிட்டட் என்ற நிறுவனத்தினால் இந்த முக்கியமான தகவல் தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பானது 1846 முதல் 1945 வரையிலான காலப்பகுதியில் சமூக. பொருளாதார, அரசியல் பின்னணிகளைப் பிரதிபலிக்கின்ற கண்ணாடி போன்றதாகும். இத்தொகுப்புக்கு என்வரிசையிடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இதன்மூலம் இத்தகவல்கள் பாதுகாக்கப்படுகின்ற அதேவேளையில் அவற்றை உலகம் முழுவதிலும் உள்ள ஆய்வாளர்கள் ஆராய முடியும்.

வாக்காளர் பட்டியலை எண்வரிசைப்படுத்தல்

முதலில் காலனித்துவ செயலகமும் அதன் பின்னர் தேர்தல் திணைக்களமும் வாக்காளர் பட்டியலைத் தயாரித்தது. அப்போது பதிவுசெய்யப்பட்ட வீட்டிலக்கங்களும் குடியிருப்பாளர்களும் இப்பட்டியலில் உள்ளன. நாட்டில் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் 1931 முதல் 1992 வரை பல வாக்காளர் பட்டியல்கள் தேசிய சுவடிகள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. முதற் கட்டமாக கொழும்பு மாவட்டத்தின் வாக்காளர் பட்டியல்களில் எண்வரிசையிடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. டைம்ஸ் தொகுப்பு, வாக்காளர் பட்டியல்களை எண்வரிசையிடல் மற்றும் தரவுகள் அடிப்படையை அமைத்தல்.

டைம்ஸ் தொகுப்பு, வாக்காளர் பட்டியல்களை எண்வரிசையிடல் மற்றும் தரவுகள் அடிப்படையை அமைத்தல்

கருத்திட்ட தலைப்பு விபரம் கால அளவு
டைம்ஸ் தொகுப்பை எண்வரிசைப்படுத்தல் பல்வேறு விடயங்களைப் பற்றிய பத்திரிகையில் வெட்டப்பட்ட துண்டுகள் மற்றும் புகைப்படங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டைம்ஸ் தொகுப்பு எண்வரிசையிடப்படும். இந்த ஆண்டில்
வாக்காளர் பட்டியல்களை எண்வரிசையிடல் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்குகிற, 1931 முதல் 1992 வரையிலான காலப்பகுதிக்கான பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர் பட்டியல்கள் தேசிய சுவடிகள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் முதற் கட்டமாக எண்வரிசையிடப்படும். இந்த ஆண்டில்

நெதர்லாந்து அரசாங்கம் - பரஸ்பர கலாசார மரபுரிமைகள் தொடர்பான கருத்திட்டம்

  • ஒல்லாந்தர் பதிவேடுகளைப் புனரமைத்தல்
  • ஒல்லாந்தர் அறிக்கைகளை நுண் திரைப்படமாக்கல்;
  • ஒல்லாந்தர் சூசிகைகளை கணனியில் பதிதல்.
    • ஒல்லாந்தர் தேவாலயத்தின் பதிவேடுகள் தொடர்பான சூசிகை
    • ஒல்லாந்தர் அரசியல் சபையின் பேரவைக் குறிப்புகள்
  • தெரிவுசெய்யப்பட்ட மிகப் பெறுமதியான 03 ஒல்லாந்தர் பதிவேடுகளை மொழிபெயர்த்தல் பதிப்புத் திருத்துதல் வெளியிடல்.
    • அதாவது:- கொழும்பிலிருந்து ஹங்வெல்லவரைக்கும் காலி கட்டளைப் பிரதேசத்துக்கு (commandment) 1717ல் ஆளுநர் ஐசக் ஒகஸ்ட் றூப் சென்ற பயணம் தொடர்பாக எழுதப்பட்ட தினக் குறிப்பு
    • 1719 டிசம்பர் 12 முதல் 1719 பெப்ரவரி 04 வரை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஆளுநர் ஐசக் ஒகஸ்ட் றூப் சென்ற பயணம் தொடர்பாக எழுதப்பட்ட தினக் குறிப்பு
    • ஒல்லாந்த – சிங்கள அகராதியை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்த்தல், பதிப்புத் திருத்துதல்.
  • கழன்றுபோய் அல்லது காணாமற்போயுள்ள தோம்புகளின் பக்கங்களை அடையாளம் காணுதல் மற்றும் குறித்த தோம்புகளுக்கு அவற்றை உட்சேர்த்தல்.
  • பதிவேடுகள் முகாமைத்துவம், பேணிக்காத்தல் தொடர்பான பயிற்சிகளை அளித்தல்

பேராசிரியர். திரு. கே.டி. பரனவித்தான

பரஸ்பர கலாசார மரபுரிமை தொடர்பான கருத்திட்டத்தின் பயன்கள்.
  • ஒல்லாந்தர் அறிக்கைககளின் இரசாயன, உயிரியல் மற்றும் பௌதிக சேதத்தைக் குறைத்துக்கொள்தல்
  • தகவல்களைப் பெற்றுக்கொள்வதை இலகுபடுத்தல்
  • பரஸ்பர கலாசார மரபுரிமை தொடர்பான அறிவை மேம்படுத்துதல்
  • பொதுமக்களுக்காக சட்ட மற்றும் ஆய்வு நடவடிக்கைகளின்போது தாமதமின்றி பிரதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல்.
  • இலங்கையர்கள் ஒல்லாந்த நாட்டவர்கள் மற்றும் ஏனைய அக்கறை காட்டுகின்றவர்களுக்காக ஒல்லாந்தர் நிர்வாகம் பற்றிய தகவல்களைப் பாதுகாத்தல்.
  • ஒல்லாந்தர் பதிவேடுகளைப் பாதுகாத்து ஆய்வுசெய்யும் பணிகளை இலகுபடுத்துதல்.
  • பயிற்சி வசதிகளை மேம்படுத்துதல், பதிவேடுகள் முகாமைத்துவம் மற்றும் பதிவேடுகளைப் பேணிப்பாதுகாத்தல் தொடர்பான தொழில்சார்ந்த அறிவை வழங்குவதன் மூலம் தரத்தை உயர்த்துதல்


இலங்கை – நெதர்லாந்து கருத்திட்ட குழுவுக்குரிய (2010) வர்களின் புகைப்படமாகும். பரஸ்பர கலாசார மரபுரிமைகள் பணிப்பாளர் (National Archives) ரொலொப் ஹோல், தேசிய சுவடிகள்கூட பணிப்பாளர் கலாநிதி சரோஜா வெத்தசிங்கவும் பரஸ்பர கலாசார மரபுரிமை தொடர்பான கருத்திட்ட பணிப்பாளர் திருமதி ஜின்னா ஸ்மித் உள்ளிட்ட தேசிய சுவடிகள் காப்பக திணைக்கள உத்தியோகத்தர்கள் சிலர்.

Last Updated on Monday, 21 October 2013 06:00  
காப்புரிமை © 2024 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது: 16-04-2024.