சுவடிகள் காப்பக நூலகம்
இலங்கையில் அச்சிடப்பட்ட அரிதான நூல்கள் பல இங்கு வைக்கப்பட்டுள்ளன. கொள்வனவு செய்வதன் மூலம், நன்கொடையாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நூல்கள், சஞ்சிகைகள் இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக ஏட்டுச் சுவடிகள் பல இங்கு வைக்கப்பட்டுள்ளன. கலை மற்றும் ஆய்வு பெறுமதியுடைய பலவகை சஞ்சிகைகள் இங்கு இருக்கின்றன. சுவடிகள் தொடர்பில் உலகத்தில் வெளியிடப்படுகின்ற முன்னணி சஞ்சிகைகள் மற்றும் நூல்கள் கடமைகளுக்காகவும் ஆய்வு நடவடிக்கைகளுக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சுவடியியல் வரலாறு அரசியல் விஞ்ஞானம், சுயசரிதைகள், சிங்களம், கலாசாரம், வெகுசன தொடர்பாடல், பொருளியல் மற்றும் சட்டம் ஆகிய பல்வேறு விடயங்களின் கீழ் நூல்களும் சஞ்சிகைகளும் இருக்கின்றன. குறிப்பாக திணைக்கள உத்தியோகத்தர்களின் ஆய்வு நடவடிக்கைகளுக்காக மாத்திரம் இந்நூலகத்தை பயன்படுத்தினாலும் ஏனைய நூலகத்தில் வாசிக்க முடியாத சுவடிகளுக்காக உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வாளர்களுக்கு விசேட அனுமதியின் கீழ் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
ஹொரகொல்ல நூலகம்
எஸ்.டபிள்யு.ஆர். பண்டாரநாயக்க குடும்பத்தவர்களால் பயன்படுத்தப்பட்ட நூல்கள், தினக்குறிப்புகள் போன்ற ஆவணங்கள் தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்களத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. அச்சேர்க்கை "ஹொரகொல்ல நூலகம்" எனக் குறிப்பிடப்படுகின்றது. பல்வேறு விடயங்கள் தொடர்பான ஏறாழமான புத்தகங்கள் இதில் உள்ளடங்குகின்றன. அவற்றிற்கிடையே எஸ்.டபிள்யு.ஆர்.பி.பண்டாரநாயக்கா அவர்களின் தினக்குறிப்பு புத்தகங்கள் சிலதும் வாழ்க்கை சரிதமும் ஹன்சார்ட் அறிக்கைகளும் சட்டங்களும் பிரித்தானிய யுகத்தின் அறிக்கைகள் பலவும் உள்ளடங்குகின்றன. பண்டாரநாயக்க குடும்பத்தின் அனுமதியுடன் மாத்திரம் இப்புத்தகத்தை பயன்படுத்த முடியும்.