Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவு தகவல் ஆராய்ச்சி அறை

ஆராய்ச்சி அறை

திறக்கப்படும் நேரம் : மு.ப.9.00 மணிமுதல் பி.ப. 4.00 மணிவரை

கொழும்பில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்திலும் கண்டியில் அமைந்துள்ள கிளை அலுவலகத்திலும் பொதுமக்களுக்கு ஆய்வு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

சுவடிகள் தொகுப்புகளில், தேடல் பிரித்தெடுப்பு, சுருக்கம், சூசிகை மற்றும் பட்டியல்கள் இங்கு உள்ளன. சிங்களம், தமிழ், ஆங்கிலம்.

சுவடிகளிலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல்

தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தில் வைப்பிலிடப்பட்டுள்ள அரச சுவடிகளை பொதுமக்கள் பரிசீலிப்பதற்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஒரு சில மூடிய சுவடிகளை பொதுமக்கள் பரிசீலிப்பதற்காகப் பெற்றுக்கொள்வதற்கு மூடிய காலம் முடிவடைந்திருத்தல் அல்லது அந்த ஆவணங்களைப் படைத்த அதிகாரிகளிடமிருந்து எழுத்துமூல அனுமதியையும் சுவடிகள் காப்பக பணிப்பாளரின் எழுத்துமூல அனுமதியையும் பெற்றுக்கொள்ள வேண்டும். 1976ஆம் ஆண்டின் பின்னர் இற்றைவரை வெளியிடப்பட்ட வெளியீடுகள் மற்றும் செய்தித்தாள்களைப் பார்ப்பதற்காக தேசிய நூலக மற்றும் சுவடிகள் பணிப்பாளரின் எழுத்துமூல அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 1976ஆம் ஆண்டின் பின்னர் இற்றைவரை வெளியிடப்பட்ட வெளியீடுகள் மற்றும் செய்தித்தாள்களைப் பார்ப்பதற்காக தேசிய நூலக மற்றும் சுவடிகள் நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும். 1976ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களை இத்திணைக்களத்தில் பரிசீலிக்க முடியும். வேறு எந்த நூலகத்திலும் பெற்றுக்கொள்ள முடியாத நூல்களையும் இத்திணைக்களத்தில் பரிசீலிக்க முடியும்.

ஆய்வு/தேடல் அறை வசதிகள்

  • சிங்கள, தமிழ், ஆங்கில செய்தித்தாள்களுக்கான கால வரிசைமுறையும் அகரவரிசை சூசிகையும் உண்டு.
  • ஆவண தொகுப்புகளுக்கான அட்டவணைகள்
  • ஆய்வாளர்கள் தாமே ஆய்வுசெய்ய வேண்டும்
  • ஆய்வு முறைகள், சுவடிகள்கூடத்தில் உள்ள பொருட்களைக் கேட்கும் முறை மற்றும் தேடல் உதவிகளைப் பயன்படுத்துதல் என்பவைபற்றி சுவடிகள் காப்பக பணியாளர்களிடமிருந்து ஆலோசனைகள் கிடைக்கும்.
  • தேசிய சுவடிகள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள நுண்நிழல்பட வாசிப்பு இயந்திரத்தின் உதவியில் அந்த நுண்நிழல்படத்தைப் பார்க்க முடியும்.
  • தேசிய சுவடிகள் காப்பக பணிப்பாளரின் அனுமதியுடன் மடிக்கணனியை ஆய்வு அறையில் பயன்படுத்த முடியும்.
  • ஆய்வு செய்தல், சுவடிகளைத் தேடுதல். பிரித்தெடுப்பு, சுவடிகளைப் பயன்படுத்துதல் என்பவை தொடர்பில் சுவடிகள் காப்பக உத்தியோகத்தர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

தேடல் அறையில் வைக்கப்பட்டுள்ள சுவடிகள்

  • அரசாங்கத்தின் வர்த்தமானி – 1802 - 1900
  • நீல புத்தகம் (புளு புக்)  –  1821 - 1937
  • கூட்டத்தொடர் அறிக்கைகள் (Sessional Papers) –  1860க்குப் பின்
  • நிர்வாக அறிக்கை –  1867க்குப் பின்
  • ஹன்சார்ட் அறிக்கை – 1870க்குப் பின்
  • சிவில் பட்டியல்கள் – 1863 - 1962
  • பஞ்சாங்கம் (Almanac) – 1815 - 1861
  • பாராளுமன்ற சட்டங்கள்
  • ஏனைய வெளியீடுகள் – 1865க்குப் பின்

தேடல் அறை விதிகள்

  • செல்லுபடியான பரிசீலிப்பு அனுமதிச்சீட்டொன்று உங்கள்வசம் இருக்க வேண்டும்.
  • நீங்கள் ஏதேனும் ஆவணத்தை வாசித்தாலும் வாசிக்காவிட்டாலும் தேடல் அறைக்குள் நுழையும் ஒவ்வொரு நாளும் நீங்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும்.
  • நீங்கள் தேடல் அறையில் மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • நீங்கள் புகைத்தல், ஏதேனும் பானங்களை அருந்துதல் அல்லது (வெற்றிலை, இனிப்பு பண்டம், சுயிங்கம் போன்றவை உட்பட) எவற்றையும் சாப்பிடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
  • தேசிய சுவடிகள் காப்பக பணிப்பாளரின் அல்லது தேடல் அறைக்குப் பொறுப்பான உத்தியோகத்தின் எழுத்துமூல அனுமதியின்றி 18 வயதுக்குக் குறைந்தவர்கள் தேடல் அறைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். பாடசாலை பிள்ளைகள் வருவதற்கு முற்கூட்டியே ஒழுங்குகள் செய்துகொள்ள வேண்டும்.
  • உங்களிடமுள்ள ஆவணப் பெட்டி (briefcases), பெரிய பைகள்/குறிப்புச் சீட்டு கோப்பு (dockets) மற்றும் கையடக்க தொலைபேசி என்பவற்றை விருந்தினர் அனுமதி பத்திரம் வழங்கும் நுழை வாயிலில் வைக்க வேண்டும். விருந்தினர் அனுமதி பத்திரமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு தேசிய அடையாள அட்டை/பதவி அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப்பத்திரம் ஒப்படைக்கப்பட வேண்டும். விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தையும் ஒப்படைத்த பொருட்கள் போன்றவற்றிற்கு வழங்கப்பட்ட பற்றுச்சீட்டையும் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் ஒப்படைத்ததன் பின்னர் உங்கள் பொருட்கள் திரும்பக் கிடைக்கும்.

  • பாதுகாக்கப்பட்ட அறிக்கைகள், நூலக புத்ததகங்கள், சட்ட வைப்புகள் பிரதிகள் என்றவகையில் பிரித்து வைக்கப்பட்டுள்ள விடயங்களில் நீங்கள் வாசிக்க விரும்பும் ஒவ்வொரு விடயத்துக்கும் வெவ்வேறு உத்தியோபூர்வ விண்ணப்ப படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும். இந்த உத்தியோகபூர்வ விண்ணப்ப படிவத்தை சுவடிகள்கூட பொறுப்பதிகாரியிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
  • தேடல் அறையில் சேவையிலீடுபட்டுள்ள உத்தியோகத்தரின் விசேட அனுமதியின்றி  ஆய்வாளர் ஒருவருக்கு ஒரே நேரத்தில் மூன்று விடயங்கள் அல்லது தொகுப்புகள் மாத்திரம் வழங்கப்படும். இந்த விதி ஒன்றாக கட்டப்பட்ட இதழ்கள், தேசப்படங்கள், திட்ட  வரைபடங்கள், நூலக நூல்கள் போன்ற விடயங்களுக்கும் ஏற்புடையதாகும்.
  • நீங்கள் பெற்றுக்கொண்ட விடயங்கள் தொடர்பில் உங்கள் பணிகள் முடிவடைந்தவுடன்,    அவ்விடயங்களை தேடல் அறையில் கடமையில் உள்ள உத்தியோகத்தரிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் மீள ஒப்படைக்கும்வரை பெற்றுக்கொண்ட பொருட்களுக்கு நீங்கள் பொறுப்புக்கூற வேண்டும்.
  • அடுத்த நாளும் நீங்கள் பெற்றுக்கொண்ட விடயங்கள் தொடர்பில் செயற்பட வேண்டியிருந்தால்  நீங்கள் ஒதுக்க பத்திரமொன்றை (Reservation Form)  நிரப்பிக்கொடுக்க வேண்டும்.

  • You must not write on or mark any original Archival documents in any way or take documents out of the Search Room.
  • You must not use liquid ink, fountain, ball point or fiber tip, highlighting pens, correcting fluid or erasers in the search room. To take your own notes, you should use pencils only, and they should sharpened at the designated location in the search room. If it is your first visit to the search room, if you do not have a pencil with you, request the officer in charge of the search room for a pencil. If you available, purchase a pencil from outside.
  • You must be careful not to damage documents. You must not lean on or dog year them, fold them, place them on your lap or with your own notes and papers.
  • You must keep unbound or loose papers in the order in which they are delivered to you. If the papers are disordered, you should bring the matter to the officer on duty immediately.
  • You must report to the officer on duty any defect in or accident to a document.
  • The officer on duty may require that certain fragile/brittle or especially valuable documents cannot be examined must be examined, under special condition.

  • பாதுகாக்கப்பட்ட சுவடிகளை வரைந்தெடுப்பது (tracing) தடைசெய்யப்பட்டுள்ளது.
  • தேசிய சுவடிகள் காப்பக பணிப்பாளரின் எழுத்துமூல அனுமதியின்றி ஆவணங்கள் எவற்றையும் போட்டோ பிரதி எடுத்தலாகாது. பொதுவாக போட்டோ பிரதி எடுக்க அனுமதியில்லை. நுண்நிழற்படமாக்கல் (micro filming) மற்றும் கணனி நுண்ணாய்வுக்காக (scanning) முன்வைக்கப்படுகின்ற விண்ணப்பங்களை பொதுமக்கள் தொடர்பு அலுவலகத்துக்கு விசேட விண்ணப்ப படிவமொன்றின்மூலம் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணத்துக்கு சேதமேற்படக்கூடிய ஆபத்து இருக்குமானால் இவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
  • தேசிய சுவடிகள் காப்பக பணிப்பாளரின் எழுத்துமூல அனுமதியுடன் மாத்திரம் கெமராவை அல்லது வீடியோ கெமராவைப் பயன்படுத்தி ஆவணங்களைப் படமெடுக்க அல்லது வீடியோ படமெடுக்க இடமளிக்கப்படும். கெமரா அல்லது வீடியோ கெமரா பயன்படுத்துவதற்கான செலவை பொதுமக்கள் தொடர்பு அலுவலகத்தில் அறிந்துகொள்ள முடியும்.

  • தட்டச்சைப் பயன்படுத்த அனுமதியில்லை
  • கடமையிலுள்ள அதிகாரியின் அனுமதியுடன் தேடல் அறைக்குள் சிரமங்களை ஏற்படுத்தாவிட்டால்  பெட்டறி உபயோகிக்கும் கணனி உள்ளிட்ட ஏனைய கணனியைப் பயன்படுத்த முடியும்.
  • தேசிய சுவடிகள் காப்பக பணிப்பாளரின் அனுமதியுடன் தேடல் டிக்டபோன் (dictaphones)  பயன்படுத்த முடியும்.
  • தேடல் அறையில் வீடியோ கெமரா பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

  • வெளியீட்டு உரிமையுள்ள கையெழுத்து பிரதிகளை/ ஆவணங்களை வெளியிடுவதற்காக விண்ணப்பங்களை தேசிய சுவடிகள் காப்பக பணிப்பாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
  • வெளியீட்டுக்காக தகவல்களைப் பயன்படுத்துகின்றபோது அத்தகவல்களைப் பெற்றுக்கொண்ட தோற்றுவாயைக் குறிப்பிட வேண்டும்.
  • எழுதப்படுகின்ற கலை கட்டுரைகள் அல்லது வெளியீடுகளின் ஒரு பிரதி வீதம் தேசிய சுவடிகள் காப்பக நூலகத்தில் வைக்கவேண்டும்.
  • தேசிய சுவடிகள் காப்பகத்தில் உள்ள வளங்களிலிருந்து தகவல்கள் அல்லது வாசிப்பு பகுதிகளைப் பெற்றுக்கொண்டு வெளியிடுகின்றபோது பயன்படுத்துகின்றவர்கள் பின்வருமாறு அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    தேசிய சுவடிகள் காப்பகத்தின் பெயர்/ பதிவுத் தொகுப்பின் எண், எண்கள்/ விடய இலக்கம்.
    உதா: இலங்கை தேசிய சுவடிகள் காப்பகம் ஆர்ஜி 1/500 (சுருக்கம் SLNA)

Normal 0 false false false MicrosoftInternetExplorer4

Archival Records are issued to the readers subject to the following rules

General Conditions:

Last Updated on Tuesday, 22 January 2019 03:44  

தேடுக

பதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்

சுவடிகள் கூடம்

ஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது

புகைப்பட தொகுப்பு

எமது புத்தம் புதிய புகைப்படங்கள்...

தோம்பு சுட்டி

போர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.

கருத்துக்களைத் அனுப்புங்கள்

உங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்

வெளியீடுகள்

வெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்

காப்புரிமை © 2024 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது: 16-04-2024.