Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு எம்மைப்பற்றி மீள்பார்வை

மீள்பார்வை

தொலைநோக்கு

தேசத்தின் அடையாளம், பொறுப்புடைமை மற்றும் ஞாபகச் சின்னங்களைப் பேணுகின்ற ஆவணப் பாரம்பரியத்தின் வினைத்திறனான முகாமைத்துவமும் பாதுகாப்பும்

செயற்பணி

பொது நிறுவனங்களின் சான்றாவணங்களை முறையாக முகாமை செய்வதுடன் தேசத்தின் வரலாறு மற்றும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் தனிப்பட்ட ஆவணங்களையும் பாதுகாத்தல்

நோக்கமும் பணிகளும்

1973ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க தேசிய சுவடிகள் காப்பக சட்டத்தின் பிரகாரமும் 1981ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க தேசிய சுவடிகள் காப்பக (திருத்தச் சட்த்தின்) பிரகாரமும் நோக்கங்களும் பணிகளும்.

  1. அரச சுவடிகளின் பொறுப்பை வகித்தலும் அவற்றின் பௌதிக நிலையைப் பாதுகாத்தலும்.
  2. ஆய்வு மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்காக அவற்றை வழங்குதல்.
  3. அரச நிறுவணங்களின் சுவடிகளை ஆய்வுசெய்தல்
  4. சனாதிபதியின் சுவடிகள் காப்பகத்தை நிர்வகித்தல் மற்றும் தகவல் குறிப்புகளை வழங்கும் சேவை.
  5. இந்நாட்டில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் மற்றும் செய்தித்தாள்கள் என்பவற்றின் சட்டரீதியான வைப்புகளின் களஞ்சியமாக செயலாற்றுதல்.
  6. தனிப்பட்ட சுவடிகளை சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் பெயர்ப்பட்டியல்படுத்தல்
  7. அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் ஆட்களுக்கும் சுவடிகள் பாதுகாப்புக்கு உதவுதல்.
  8. வணக்கஸ்தலங்களின் சுவடிகளைப் பாதுகாத்தல்.
  9. சுவடிகள் முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி செயலமர்வுகளை நடத்துதல்
  10. அச்சகங்கள், அச்சிடுவோர், வெளியிடுவோர், மற்றும் செய்தித்தாள்கள் தொடர்பான கட்டளைச் சட்டங்களை அமுலாக்குதல்.

சட்டவாக்கமும் ஒழுங்குவிதிகளும்

சட்டங்கள்

  1. 1973ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க தேசிய சுவடிகள் காப்பக சட்டம்.
  2. 1981ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க தேசிய சுவடிகள் காப்பக (திருத்தச்) சட்டம்.
  3. விதிக்கப்பட்டுள்ள சட்டம்
    1. 1902ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க அச்சக கட்டளைச் சட்டம் (Cap. 178) மற்றும் அதற்கான திருத்தம்.
    2. 1885ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க அச்சிடுவோர் மற்றும் வெளியீட்டாளர் தொடர்பான கட்டளைச் சட்டம் (Cap. 179) மற்றும் அதன் திருத்தம்.
    3. 1839ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க செய்தித்தாள் கட்டளைச் சட்டம் (Cap. 179) மற்றும் அதன் திருத்தம்.
 

ஒழுங்குவிதிகள்

  1. பொது அறிக்கைகளுக்கான பொது அணுகுமுறை
    1978 டிசம்பர் 15ஆம் திகதியிட்ட அரசாங்க வர்த்தமானி பத்திரிகை இலக்கம் 15.
  2. ஆணைக்குழு அறிக்கைகளுக்கான பொது அணுகுமுறை
    1980 சனவரி 02ஆம் திகதியிட்ட அரசாங்க வர்த்தமானி பத்திரிகை இலக்கம் 74.
  3. நீதிமன்ற அறிக்கைகளை அகற்றுதல்
    1979 சனவரி 26ஆம் திகதியிட்ட அரசாங்க வர்த்தமானி பத்திரிகை இலக்கம் 21.
  4. கச்சேரி அறிக்கைகளை அகற்றுதல்
    1980 யூலை 25ஆம் திகதியிட்ட அரசாங்க வர்த்தமானி பத்திரிகை இலக்கம் 99.
  5. பொது நிறுவனங்களின் மனை பராமரிப்பு/ சில நாள் மட்டும் பயன்படுத்துகிற அறிக்கைகளை அகற்றுதல்.
    1984 ஆகஸ்ட் 31ஆம் திகதியிட்ட அரசாங்க வர்த்தமானி பத்திரிகை இலக்கம் 313.
  6. அறிக்கைகளை அகற்றுவது தொடர்பிலான நிர்வாக ஒழுங்குவிதியின் 28வது அத்தியாயத்தின் உறுப்புரை 9:1 – 9:8 (ஸ்தாபன கோவை)
  7. அரச அறிக்கைகளைப் பாதுகாக்கும் அட்டவணைகள் தொடர்பான 2008/25ஆம் இலக்கமுடைய 2008ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க பொது நிருவாக சுற்றறிக்கை.
  8. தேசிய சுவடிகள் காப்பகத்தின் தேடல் அறை சட்டங்கள்.
 

Last Updated on Thursday, 12 August 2021 07:18  

தேடுக

பதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்

சுவடிகள் கூடம்

ஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது

புகைப்பட தொகுப்பு

எமது புத்தம் புதிய புகைப்படங்கள்...

தோம்பு சுட்டி

போர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.

கருத்துக்களைத் அனுப்புங்கள்

உங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்

வெளியீடுகள்

வெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்

காப்புரிமை © 2024 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது: 16-04-2024.