Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவு தகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல் அறிக்கைகள் கொள்ளல் பிரிவு

பதிவேடுகள் கொள்ளல் பிரிவு

அரச நிறுவனமொன்றிலிருந்து அல்லது ஆட்களிடமிருந்து பதிவேடுகளை இந்நிறுவனத்திற்குப் பெற்றுக்கொள்ளும் பணிகள் இப்பிரிவின்மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. 1973ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க சுவடிகள் பாதுகாப்பு சட்டத்தின் 09வது பிரிவின் (2) (ஈ) பந்தியின் பிரகாரம் 25 வருடங்களுக்கு மேற்பட்ட  மிகவும் பெறுமதியான அரச பதிவேடுகளை தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்திடம்  ஒப்படைக்க வேண்டும். அத்துடன் சட்டத்தின் 11வது பிரிவின் பிரகாரம் மூடப்படுகின்ற அல்லது மூடப்படவிருக்கின்ற அரச நிறுவனத்தின் வசமுள்ள முக்கியமான பதிவேடுகளை தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்திடம்  ஒப்படைக்க வேண்டும்.

12வது பிரிவின் பிரகாரம் ஆட்கள் வசமுள்ள மிக அரிதான கையெழுத்துப் பிரதிகள் அல்லது பதிவேடுகள் என்பவற்றை தேசிய சுவடிகள் கூடத்தில் ஒப்படைக்க முடியும்.

13வது பிரிவின் பிரகாரம் அரச நிறுவனங்களிலிருந்து வெளியிடப்பட்ட வெளியீடுகள், தபால் மா அதிபரினால் வெளியிடப்பட்ட முத்திரைகள் மற்றும் முதல்நாள் உறைகள், மத்திய வங்கி ஆளுநரால் அச்சிடப்பட்ட நாணயத்தாள்கள், நாணய குற்றிகள், நில அளவை அதிபர் அலவலகத்தினால் வரையப்பட்ட திட்ட வரை படங்கள், தேசப்படங்கள் ஆகியவற்றின் ஒரு பிரதி வீதம் தேசிய சுவடிகள் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அத்துடன் ஏதேனும் தேர்தல் ஒன்றுக்குத் தோற்றுகினற அனைத்து வேட்பாளர்களும் அவர்களின் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், அறிவித்தல்கள் என்பவற்றின் ஒரு பிரதி வீதம் அனுப்பிவைக்க வேண்டும்.

இந்த பதிவேடுகள் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அப்பதிவேடுகளுக்கு பதிவேட்டு தொகுப்பு இலக்கமும் இணைப்பு இலக்கமும் வழங்கப்படும். அதன் பின்னர் அவற்றைப் பரிசீலிப்பதற்காக வழங்க முடியும்.

பதிவேடுகளை இணைத்துக்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் வருமாறு.

  • கிடைத்த அனைத்து பதிவேடுகளும் எதிர்பார்க்கப்பட்ட பதிவேடுகள் என்பதை உறுதிப்படுத்துதல்
  • அந்த பதிவேடுகளுக்கு சூசிகைகளைத் தயாரித்தல்
  • பதிவேடு தொடர்பான விபரங்களை பதிவேடுகளை இணைத்துக்கொள்ளும் பதிவுப் புத்தகத்தில்  பதிதல்
  • தேசிய சுவடிகள் காப்பகத்தின் களஞ்சியங்களிலல் நிரந்தரமான ஓரிடத்தில் கோவைப்படுத்தி வைத்தல் (வைப்பில் இடுவதற்கு முன்னர் புகையூட்டுவதற்காக அனுப்புதல்)
  • "திறந்த" பதிவேடுகள் எனில் பொதுமக்கள் பரிசீலிப்பதற்காக அவற்றை வழங்குதல். (நிபந்தனைகள் இன்றி பொதுமக்கள் பரிசீலிக்கக்கூடிய பதிவேடுகள் 'திறந்த' பதிவேடுகள் என குறிப்பிடப்படும்.

இணைவதற்கான பதிவகத்தை தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

Last Updated on Thursday, 21 August 2014 09:48  

தேடுக

பதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்

சுவடிகள் கூடம்

ஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது

புகைப்பட தொகுப்பு

எமது புத்தம் புதிய புகைப்படங்கள்...

தோம்பு சுட்டி

போர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.

கருத்துக்களைத் அனுப்புங்கள்

உங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்

வெளியீடுகள்

வெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்

காப்புரிமை © 2024 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது: 16-04-2024.