Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவு தகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல் செவிப்புல கட்புல பிரிவு

செவிப்புல கட்புல பிரிவு

திணைக்களத்தில் உள்ள திரை படங்கள், வீடியோ படங்கள், இலத்திரனியல் காந்த நாடாக்கள், செவிப்புல ஒலிப்பதிவு நாடாக்கள், இறுவட்டுக்கள், இணைப்பாக்கம் செய்யப்பட்ட இறுவட்டுக்கள், புகைப்படங்கள் (கறுப்பு/வெள்ளை) சறுக்கு படங்கள் மற்றும் நுண் திரைப்படங்கள் போன்ற கட்புல செவிப்புல பதிவேடுகள் இப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. செவிப்புல கட்புல பதிவேடுகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆய்வாளர்களுக்காக ஆய்வு அறைகளுக்கு விநியோகித்தல் ஆகிய பணிகள் இப்பிரிவின்மூலம் நிறைவேற்றப்படுகின்றன. திணைக்களத்தில் உள்ள மிக அரிய நாட்டுப்பாடல் இசைத்தட்டுகளை ஆய்வாளர்கள் கேட்பதற்கு வசதிகள் செய்து கொடுத்தல், பிரதிகளை வழங்குதல் மற்றும் நுண் திரைப்படங்களின் பிரதிகளை வழங்குதல் மற்றும் கட்புல செவிப்புல உபகரணங்களைப் பராமரித்தல் ஆகிய பணிகள் இப்பிரிவின்மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

செவிப்புல கட்புல பதிவேடுகள்

  • திரைப்படம் – முன்னாள் நிறைவேற்றதிகாரம்கொண்ட சனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அவர்களின் உரைகள் மற்றும் இலங்கையின் கலாசாரத்தை எடுத்துக்காட்டுகின்ற திரைப்படங்கள் (மி.மீ.35 மற்றும் 16 அளவில்)
  • வீடியோ படம் – முன்னாள் பிரதம அமைச்சர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் வாழ்க்கைச் சரிதம், பதிவேடுகள் முகாமைத்துவம் தொடர்பான வீடியோ நாடா மற்றும் சனாதிபதி ஆணைக்குழுக்களின் வீடியோ நாடாக்கள்.
  • இலத்திரனியல் காந்த நாடாக்கள் – 1960ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கலாசார அமைச்சும் லீவர் பிரதர்ஸ் நிறுவனமும் இணைந்து ஒலிப்பதிவு செய்து, தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்துக்கு வழங்கியுள்ள, இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் வாழ்ந்த புராதன கிராமிய மக்களால் பாடப்பட்ட நாட்டுப்பாடல்களின் தொகுப்பு. ஜோதிபால அவர்களின் பாடல்கள் அடங்கிய காந்த நாடா உண்டு.
  • செவிப்புல ஒலிப்பதிவு நாடா – இலங்கை சனாதிபதிகளினால் நியமிக்கப்பட்ட சனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகளின் தகவல்கள் அடங்கியுள்ளன.
  • இறுவட்டு – அரசாங்க திணைக்களங்கள், அமைச்சுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து வழங்கப்பட்டுள்ள நிர்வாக அறிக்கைகள், கணக்கீட்டு நடவடிக்கைகள், கருத்திட்டங்கள், விவசாய நிகழ்ச்சித்திட்டங்கள் என்பன உள்ளடங்கியுள்ளன. மேலும் இணைக்கப்பட்டுள்ள நபர்களினால் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஆற்றிய உரைகள் அடங்கிய இறுவட்டுக்கள் இருக்கின்றன. (பெலேன வஜிரஞான தேரர், அநகாரிக தர்மபால, வலிசிங்க ஹரிச்சந்திர, மார்ட்டின் விக்கிரமசிங்க போராசிரியர் செனரத் பரணவிதான, குணபால அமரசேகர போன்றவர்கள்)
  • புகைப்படங்கள் – லீவர் பிரதர்ஸ் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள இலங்கையின் ரஜமகா விகாரைகளின் சுவரோவியங்கள் (கறுப்பு/வெள்ளை) பாதுகாக்கப்பட்டுள்ளன.
  • நுண் திரைப்படங்கள் – போர்த்துக்கீசர் பதிவேடுகள், இலங்கையில் வெளியிடப்பட்ட சிங்கள, தமிழ், ஆங்கில செய்தித்தாள்கள் மற்றும் பல்வேறு பதிவேடுகள் நுண் திரைப்படமாக்கப்பட்டுள்ள.

நுண் படமாக்கப்பட்டுள்ள பத்திரிகைகள்

சிங்களம் – 1862 முதல்
தினமின 1909 – 1948, 2006 – 2009
லக்மிணிபஹன 1864 – 1894
லக்ரிவிகிரண 1864 – 1902
லங்காதீப 1947 – 1948
சரசவி சந்தரெச 1880 – 1900, 1922
சிலுமின 1930 – 1935
தவச 1961 – 1970
சிங்கள பௌதயா 1906 – 1959, 1932, 1976
ஜனதா 1956 – 1976
சிங்கள ஜாத்திய 1953 – 1976, 1980- 1981
பெரமுண 1916 – 1949
ஜனசத்திய 1963 – 1976
எத்த 1967 – 1976
ஆங்கில பத்திரிக்கைகள் - 1832 முதல்
களம்பு ஜர்னல் 1832 – 1875
சிலோன் ஒப்சர்வர் 1841 – 1952
களம்பு ஒப்சர்வர் 1842 – 1868
சிலோன் டெய்லி நியுஸ் 1840 – 1841, 1925 – 1930, 1948, 1950, 2005 –2009
சிலோன் இன்டிபென்டன்ஸ் 1894 – 1937
த டைம்ஸ் ஒப் சிலோன் 1846 - 1954
எக்சாமினர் 1846 – 1900
ஏனையவை
அலஹமன் லங்காபூரி 1869 – 1870
விரகேசரி 1947 – 1963
ஹிந்து ஒர்கன் 1889 – 1922
Last Updated on Monday, 25 August 2014 05:31  

தேடுக

பதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்

சுவடிகள் கூடம்

ஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது

புகைப்பட தொகுப்பு

எமது புத்தம் புதிய புகைப்படங்கள்...

தோம்பு சுட்டி

போர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.

கருத்துக்களைத் அனுப்புங்கள்

உங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்

வெளியீடுகள்

வெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்

காப்புரிமை © 2024 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது: 16-04-2024.